SEGU
Nov 1, 2025
உள்ளூர்
அம்பலமானது குருந்தூர் மலை விவகாரம்!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் நேற்று யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லும் வழியில் மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே உள்ள பௌத்த விகாரையின் விஹாராதிபதி விசேட அழைப்பின் பெயரில் அவரை சந்தித்துள்ளார் .
இதன் போது , குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான விடயத்தைப் பற்றி அவர் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் அண்மையில் ஒரு விகாரை கட்டப்பட்டது இதன் போது அதனை அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது.
இந்த விவகிரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுது
அதனை ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M A சுமந்திரன் வாதாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த சந்திப்பின் போது விகாராதிபதி எழுத்து மூலமான ஓர் கடிதத்தை பாராளுன்ற உறுப்பினருக்கு வழங்கியுள்ளார் குறித்த கடிதமானது குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு 21.07.2025 முறைப்பாட்டின் பிரதி ஆகும்.
அதில் தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அட்சத்தராக செயல்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார்.
பெளத்த துறவியான இவர் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம்.
மேலும் விஹாராதிபதியினால் நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








