Search

SEGU

Nov 3, 2025

உள்ளூர்

2 மணி வரை பாடசாலை சிக்கல் எதுவும் இல்லை

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் இயன்றவரை கருத்தில் கொண்டுள்ளோம்.

தற்போதைய கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். அந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிற்பகல் 2 மணி வரை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சாதகமான பதில்களே அதிகமாகக் கிடைத்துள்ளன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp