Search

SEGU

Oct 21, 2025

உலகம்

வரலாற்றை மாற்றிய ஜப்பான்

ஜப்பானில் (Japan) முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

64 வயதான இவர் ஜப்பானின் "இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்படுகிறார், சனே டகாய்ச்சி (Sanae Takaichi) இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிம் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் பதவி விலகல் செய்தார்.

இதனையடுத்து, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுனர். கட்சியின் 295 எம்.பி.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தின் கீழ் சபை மற்றும் மேல் சபை இரண்டிலிருந்தும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி வரலாறு படைத்துள்ளார்.

கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.

தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து இப்பதவியை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp