SEGU
Nov 8, 2025
உலகம்
கனடாவில் உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை
கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் நானோஸ் ஆய்வு நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
னடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வில், 55 வயதுக்கு குறைவானவர்கள், உணவுக்காக சிற்றூந்து கடன், கடன் அட்டை அல்லது மின்சார கட்டணங்களை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
35 முதல் 54 வயதினரிலும் இதேபோல 17.9% பேர் தெரிவித்துள்ளனர். ஆனால் 55 வயது மேற்பட்டவர்களில் அது வெறும் 4.2% ஆக மட்டுமே இருந்தது என ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








