Rebecca
Sep 10, 2025
உள்ளூர்
வியத்புர திட்டத்திற்கு முற்பணம் செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வியத்புர வீடமைப்பு வளாகத்தில் வீடுகளை வாங்குவதற்காக ஆரம்ப வைப்புத்தொகையை செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டணத் திட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதியன்று ஏற்பட்ட கலவரத்தின் போது வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்திற்கு வாடகை அடிப்படையில் குறித்த வீடமைப்பு வளாகத்தில் இருந்து 101 வீட்டு அலகுகளை வழங்க 2022ஆம் ஆண்டு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த அலகுகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பொதுமக்களுக்கு வீடுகள் ரூ. 15.5 மில்லியன் முதல் ரூ. 22 மில்லியன் வரை விலையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13.34 மில்லியன் முதல் ரூ. 18.21 மில்லியன் வரை சலுகை விலையில் அவற்றை வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், கொள்முதல் விலையில் 25% முன்கூட்டியே செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் மீதமுள்ள தொகையை 10% வருடாந்த வட்டி வீதத்தில் 15 ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.
2024 டிசம்பர் 31ஆம் திகதியன்று, மொத்தம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25% முன்பணத்தை வைப்பு செய்தனர்.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் காரணமாக ரூ. 92.126 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வீடுகளுக்காக முற்பணம் செலுத்திய 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் இதோ,
பிரேமநாத் தொலவத்த
சுமித் உடுகும்புர
சஹான் பிரதீப்
சிந்தக அமல் மாயாதுன்ன
மிலன் ஜயதிலக்க
அசோக பிரியந்த
லலித் வர்ணகுமார
ஜானக திஸ்ஸகுட்டி ஆரச்சி
அஜித் ராஜபக்ஷ
எச்.எம்.டி.பி. ஹேரத்
எஸ்.எம்.எம். முஷாரப்
குமாரசிறி ரத்நாயக்க
பி.ஏ.கே. அத்துகோரள
ஷெஹான் சேமசிங்க
குலசிங்கம் திலீபன்
நிமல் பியதிஸ்ஸ
காமினி வலேபொட
மொஹமட் முஸம்மில்
எஸ்.எம். சந்திரசேன
அசங்க நவரத்ன
காமினி லொகுகே
மஹிந்த யாப்பா அபேவர்தன
பியல் நிஷாந்த
டி வீரசிங்க
சாந்த பண்டார
அருந்திக பெர்னாண்டோ
பிரசன்ன ரணதுங்க
அலிசப்ரி ரஹீம்
சமிந்த சம்பத்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All