Search

SEGU

Oct 21, 2025

உள்ளூர்

செயலிழந்த அரச இணைய சேவைகள்

இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. 

குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்த முடியும் என அதன் பேச்சாளர் தெரிவித்தார். 

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகள் கடந்த ஒருவார காலமாக செயலிழந்தன. 

சுமார் 34 அரச நிறுவனங்களின் சேவைகள் இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக ICTA குறிப்பிட்டுள்ளது. 

இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர) இணையவழியிலான வருமான வரி அமைப்பு (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp