Search

Rebecca

Sep 11, 2025

உள்ளூர்

உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள்

வங்கி அட்டைகள் மூலம் வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் இணையவழி மூலம் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உதவுகிறது.

இந்த நடவடிக்கை நீதிமன்ற அமைப்பில் பணம் செலுத்துவதை தானியங்கி மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டத்தைக் குறிக்கிறது.

இந்த வசதியை நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp