Search

Rebecca

Sep 10, 2025

உள்ளூர்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

அம்பாறை - பெரியநீலாவணை, மருதமுனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நிலையில் இளைஞன் கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

28 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலைச் சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All