Search

Rebecca

Nov 24, 2025

உள்ளூர்

பெயர்ப் பலகைகளை அகற்றியது யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலுள்ள பெயர்ப் பலகைகளை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறெனினும் திட்டமிட்ட குழுவொன்று இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் இந்த செயல் அமையப்பெற்றுள்ளது.

அத்துடன் இதற்கு பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp