Search

Rebecca

Sep 7, 2025

உள்ளூர்

கரையோர பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு

கொழும்பிலிருந்து காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில்,

மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. வரை இருக்கும். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All