Jino
Sep 30, 2025
உலகம்
"விரைவில் உண்மை வெளிவரும்" - பரபரப்பு வீடியோ வெளியிட்ட விஜய். #Video
கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. மனசு முழுக்க வலி மட்டும்தான் இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்..
மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க.
சி.எம்.சார்... பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்..வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன். என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்..
இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் த.வெ.க எந்த தவறும் செய்யவில்லை. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?
பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. அத்தனை பேர் இறந்து கிடக்கும் போது எப்படி விட்டுட்டு போக முடியும்?.. அப்படி நான் அங்க போனா அதை காரணம் காட்டி, வேறு சில அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக கரூர் செல்லவில்லை.
சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. விரைவில் அனைத்து உண்மையும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.
என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் காணொளியில் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All