Search

Jino

Oct 1, 2025

உள்ளூர்

முறக்கொட்டாஞ்சேனை Camp பற்றிய உண்மைத்தன்மை அம்பலம்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...

முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் விடுவிப்பதாக வெளியுலகிற்கு இன்று படம் காட்டிய ஆளும் கட்சியின் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான க.பிரபு ஆகியோர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு கூட்டங்களில் ஒருவருடமாக எதுவும் பேசாமல் தற்போது தங்கள் முயற்சியினால் இராணுவமுகாம் விடுவித்தாக காட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என பிரதேச, அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில், பாராளுமன்றத்தில், பாதுகாப்பு அமைச்சுசார் குழுக்கூட்டங்களில் அனைத்திடங்களிலும் அழுத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்.

மேலும் இராணுவ முகாம் அமைந்திருந்த முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலையினை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்ததுடன், குறித்த பகுதியில் அமைந்திருந்த தனியார் காணிகளும் கையகப்படுத்தப்பட்டிருந்தன. அக் காணிகளில் இருந்த வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரையும் எந்தவிதமான இழப்பீடுகளும் அரசினால் வழங்கப்படவில்லை. ஆகவே அவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp