Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

கொழும்பில் நீர்வெட்டு இரத்து

கொழும்பு மாவட்டத்தின் உள்ள சில பகுதிகளில் நாளை திருத்தப்பணிகள் காரணமாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த 9 மணித்தியால நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பின்வரும் நீர்வெட்டு பகுதிகளாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் பாதிக்கப்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம முல்லேரியா, பொரலஸ்கமுவ, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All