Search

Oct 22, 2025

உள்ளூர்

"இலங்கையர் தினம்" டிசம்பரில் - அமைச்சரவை அங்கீகாரம்.

2025 ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி முன்மொழிந்த "இலங்கையர் தினம்" தேசிய நிகழ்ச்சித் திட்டம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சார இணைவை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி 2025 டிசம்பர் 12, 13, 14 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபை மைதானம், விகாரமாதேவி பூங்கா மற்றும் அருகிலுள்ள பிரதான வீதிகளில், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள், உணவுக் கலாச்சாரம், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி, புதிய உற்பத்தி அறிமுகம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்க்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp