Search

Rebecca

Sep 6, 2025

உள்ளூர்

பார்வையிழந்த மாணவி ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி.!

மட்டக்களப்பு - கல்லடி, விவேகானந்தா மகளிர் கல்லூரி பார்வையிழந்த மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர், 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர் தம்பிராசா சிவக்குமார் தெரிவித்தார்.

விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி எண்பதாகும். குறித்த மாணவி 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All