Search

Oct 14, 2025

உள்ளூர்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு - விசேட கலந்துரையாடல்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று அக்டோபர் 13 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் இடம்பெற்ற சம்பள உயர்வுக்கு ஒத்து, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்து இங்கு உரையாடப்பட்டது. தொழிலாளர்களின் வாழ்வாதார தரத்தை உயர்த்தும் நோக்கில், சம்பள உயர்வு தொடர்பான முறைகள் தொடர்பிலும், தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி, தோட்டத் தொழிற்துறைக்கு அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை வழங்க உறுதியளித்தார்.

இவ் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, தொழில் ஆணையர் நாயகம் நதீகா வட்டலியத்த மற்றும் ஏனைய அதிகாரிகள், இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் Agarapatana & Kotagala Plantation PLC, Kelani Valley Plantation PLC, Malwatte Valley Plantation PLC, Balangoda Plantation PLC, Browns Plantation PLC, Kahawatte Plantation PLC, Kegalle Plantation PLC, Agalawatta Plantation PLC ஆகிய தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp