Search

Sep 13, 2025

உள்ளூர்

சஹஸ்புர இரட்டை கொலை - முக்கிய சந்தேக நபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 07.08.2025 அன்று நடந்த துப்பாக்கிச் சூடில் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான அம்பாறை தமன் பகுதியைச் சேர்ந்த நபர், 10.71 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நேற்று (12) தமன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர் எனவும், 2015ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தமன் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All