Search

Jino

Oct 12, 2025

உள்ளூர்

பிரம்படி படுகொலை - 38 வது நினைவேந்தல் யாழ் கொக்குவிலில் அனுஷ்டிப்பு. #Video

யாழ் கொக்குவில் பிரம்படி பகுதியில் காணப்படும்  படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத் தூபியில் இன்று (12) காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன

நிகழ்வில் நினைவு தூபிக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன

1987 ஆண்டு 11திகதி மற்றும் 12 திகதிகளில் யாழ கொக்குவில் பிரம்படி பகுதியில்  இந்திய இராணுவத்தால்  50 ற்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp