Search

Oct 25, 2025

உள்ளூர்

பொலிஸார் துப்பாக்கிச் சூடு - இளைஞர் படுகாயம்.

யாழ் - தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பொலிஸார் இடைமறித்தபோது பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் சென்றுள்ளது.

தொடர்ந்து பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொடிகாமல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All