Oct 27, 2025
உள்ளூர்
உலகின் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் - யாழ்ப்பாணம்.
உலகப் புகழ்பெற்ற பயண வெளீயீடான லோன்லி பிளானட் (Lonely Planet), 2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை தேர்வு செய்துள்ளது.
இலங்கையின் செழுமையான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் காரணமாக யாழ்ப்பாணம் தெரிவுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, இலங்கை சுற்றுலாத்துறையின் பன்முக வளர்ச்சிக்கும் சர்வதேச அங்கீகாரத்துக்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
1970-இல் நிறுவப்பட்ட லோன்லி பிளானட் (Lonely Planet), உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான வழிகாட்டிப் புத்தகங்களை விற்றுள்ளதுடன், விரிவான டிஜிட்டல் அணுகலையும் கொண்டுள்ளது.
லோன்லி பிளானட்டின் கூற்றுப்படி, 2026 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த 25 இடங்கள்,
யாழ்ப்பாணம், இலங்கை
பெரு, தென் அமெரிக்கா
மெயின், அமெரிக்கா
காடிஸ், ஸ்பெயின்
ரீயூனியன், ஆப்பிரிக்கா
போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா
கார்டஜீனா, கொலம்பியா
பின்லாந்து, ஐரோப்பா
டிப்பரரி, அயர்லாந்து
மெக்சிகோ நகரம்
கெட்சால்டெனாங்கோ, குவாத்தமாலா
பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
சார்டினியா, இத்தாலி
லிபர்டேட், சாவ் பாவ்லோ
யூட்ரெக்ட், நெதர்லாந்து
பார்படாஸ், கரீபியன்
ஜெஜு-டோ, தென் கொரியா
வடக்குத் தீவு, நியூசிலாந்து
தியோடர் ரூஸ்வெல்ட் தேசியப் பூங்கா, வடக்கு டகோட்டா
குய் நோன், வியட்நாம்
சீம் ரீப், கம்போடியா
பூக்கெட், தாய்லாந்து
இக்காரா-ஃப்ளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மற்றும் அவுட்பேக், தென் ஆஸ்திரேலியா
துனிசியா, ஆப்பிரிக்கா
சாலமன் தீவுகள், ஓசியானியா
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








