Search

Rebecca

Nov 3, 2025

உள்ளூர்

தடைசெய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மன்னார் வளைகுடா மண்டபம் தோணித்துறை பகுதியில் 1360 கிலோ கடல் அட்டைகள் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டன.

மண்டபம் தோணித்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகினை சோதனை செய்த போது அதில் 80இற்கும் மேற்பட்ட மூட்டைகள் காணப்பட்டன.

அதனை சோதனை செய்த போது சுமார் 1360 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தமை தெரியவந்துள்ளது.

அரசால் தடை செய்யப்பட்ட குறித்த அட்டைகளை நாட்டு படகுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் இந்திய மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All