Rebecca
Nov 13, 2025
உள்ளூர்
இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!
சாமுத்ரிகா மேக்கப் அழகுக்கலை நிறுவனம் 315 பங்கேற்பாளர்களுடன் இரு பிரிவுகளில் ஒரே மேடையில் இரட்டை உலக சாதனையை கொழும்பில் படைத்துள்ளது.
இந்த சாதனையில் 315 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும், இணையம் வழியாகவும் கலந்து கொண்டனர்.
மணப்பெண் அலங்காரப் பிரிவில் 170 அழகுக்கலைஞர்களும், மணப்பெண் அலங்காரம் அல்லாத பிரிவில் 140 துறைசார் போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் பணியாற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை, உலக சாதனைகள் சங்கத்தின் (World Record Union) நடுவர் திருமதி ஆலிஸ் ரெய்னாட் அவர்களால் நேரடியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
மேலும், இந்த உலக சாதனையில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பெரும் வெற்றிக்காக பங்கேற்ற ஒவ்வொரு மேக்கப் கலைஞர், மாடல், ஏற்பாட்டாளர், ஆதரவாளர் மற்றும் குழு உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த சாமுத்ரிகா அழகுக்கலை நிறுவனத்தின் தலைவர், திருமதி அனு குமரேசன், "நாங்கள் அழகை மட்டும் படைக்கவில்லை, வரலாற்றையே படைத்தோம்!" எனக் கூறினார்.
மேலும், அனு குமரேசனின் சாமுத்ரிகா நிறுவனம் இதற்கு முன்பும் ஆசிய உலக சாதனைப் புத்தகத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








