Search

Nov 14, 2025

உள்ளூர்

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வீதியில் விழுந்து கிடப்பதாக வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 31 வயதுடைய கணேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது வாகன விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.

சடலம் வரகாபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All