Search

Rebecca

Nov 6, 2025

உள்ளூர்

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையே நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp