Search

Rebecca

Nov 9, 2025

உள்ளூர்

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாக உள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இம்முறை 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும் 94,004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340,525 ஆகும்.

உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை காலத்தில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் இணைந்து ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் காரணமாக இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் கூறுகிறது.

அதன்படி, பரீட்சைக் காலத்தில் பேரிடர் இல்லாத சூழலை உருவாக்க ஒவ்வொரு பங்குதாரர் நிறுவனமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனர்த்த முகாமைத்துவ மையம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சைக்குத் தோற்றும் திறன் பாதிக்கப்படக்கூடிய மாணவர்களை 117 என்ற தொலைபேசி எண் அல்லது 1911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை அறைக்குள் நிறுவப்பட்டுள்ள தேசிய பரீட்சை அவசர நடவடிக்கை பிரிவின் சிறப்பு தொலைபேசி எண்களான 0113 668 026, 0113 668 032, 0113 668 087 மற்றும் 0113 668 119 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் தேவையான ஒருங்கிணைப்பு உதவியைப் பெறலாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp