Rebecca
Nov 28, 2025
உள்ளூர்
பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக, ஒரு அதிகாரி தான் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சேவைக்குச் சமூகமளிக்க முடியாவிட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சேவைக்குச் சமூகமளிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்:
அவசர அழைப்பு இலக்கங்கள்: 117, 119
சுவசரிய சேவை (Suwasariya Service): 1990
தீயணைப்புப் பிரிவு: 110
இராணுவத் தலைமையகம்: 113
விமானப்படைத் தலைமையகம்: 116
ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கலாம்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








