Rebecca
Nov 12, 2025
உள்ளூர்
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் : பொலிஸார் விளக்கம்
கிரிந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விளக்கத்தை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தனர்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 6 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








