Search

Rebecca

Nov 3, 2025

உள்ளூர்

2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு

2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி தொடர்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்றா கமிட்டி இணைந்து 2026ஆம் ஆண்டில் ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள திணைக்களத்தில் பதிவு செய்து ரூ.5000 பணம் செலுத்தி, தமது பயணத்தை உறுதிப்படுத்திய யாத்திரிகர்களுக்காக ஹஜ் கடமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான இக்கருத்தரங்கில் தெளிவுப்படுத்தப்பட்டன.

இக் கருத்தரங்கின் நோக்கம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை மேற் கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பயணத்துடன் தொடர்புடைய தேவையான அறிவுரைகளை வழங்குவதாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள கணக்காளர் எஸ்.எல்.எம் நிப்ராஸ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கல்முனை ஜம்மியதுல் உலமா சபையின் பொருளாலர் மருதமுனை கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு நிந்தவூர் பகுதிகளை சேர்ந்த 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் செய்வதற்காக நிய்யத்து வைத்த யாத்திரிகர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp