Search

Rebecca

Nov 13, 2025

உள்ளூர்

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) காலை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் Ms. Isabelle Marie Catherine Martin, High Commissioner of Canada, based in Colombo, கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர். Mr. Wiebe Jakob De Boer, Ambassador of the Kingdom of the Netherlands, based in Colombo, கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த். Mr. Matthew John Duckworth, High Commissioner of the Commonwealth of Australia, based in Colombo, புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி. Mr. Abdenor Khelifi, Ambassador of the People's Democratic Republic of Algeria, based in New Delhi, புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்ட்சன்.Mr. Benedikt Höskuldsson, Ambassador of the Republic of Iceland, based in New Delhi. ஆகியோரே இவ்வாறு கையளித்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp