Search

Rebecca

Nov 13, 2025

பல்சுவை

பைசன் காளமாடன் திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் திகதி அறிவிப்பு

இந்திய கபடி அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகி வெளியான படம் பைசன் காளமாடன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் மணத்தி கணேசன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்தை ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.

வெறும் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 52 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

மொத்தமாக இப்படம் உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இப்படம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பைசன் காளமாடன் படம் வெளியாகவுள்ளதாம்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp