Search

Rebecca

Nov 10, 2025

உலகம்

பிபிசியின் இரு உயர் அதிகாரிகள் பதவி விலகல்!

பிபிசி ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி (Tim Davie) இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணப்படம் ஒன்றைத் தொகுக்கும் போது பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவரைத் தவிர, பிபிசி ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பிரதானியாக பணியாற்றிய டெபோரா டேர்னெஸ்ஸம் (Deborah Turness) இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிபிசி நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகுவதற்கான தமது முடிவு தனிப்பட்ட முடிவு என்று டிம் டேவி குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp