Search

Rebecca

Sep 8, 2025

உள்ளூர்

கனடாவிலிருந்து யாழ் வந்த சயினகா உயிரிழப்பு!

கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த சதீஸ்வரன் சயினகா என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி - கல்லுவம் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி தெல்லிப்பழை புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கள் கிழமை கல்லுவத்தில் உள்ள அன்னாரின் பூர்வீக வீட்டில் இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமியின் திடீர் மரணத்தால் வடமராட்சி கல்லுவம் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All