Search

Rebecca

Sep 6, 2025

உள்ளூர்

போதைப்பொருள் வழக்கு தொடர்பில் ஒருவர் கைது

இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 50,000 கிலோகிராம் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் சகோதரருக்குச் சொந்தமான நிலத்தில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர் இந்த முறை இலங்கை பொதுஜன பெரமுனவின் கீழ் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All