Search

Jino

Sep 18, 2025

உலகம்

காசா நகரம் சிதறியது - 65 ஆயிரத்திற்கு அதிகமான உயிரிழப்புக்கள்.

காசா - இஸ்ரேல் போர் 2023 ஒக்டோபர் 7 திகதி முதல் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காசாவுக்கு எதிராக தரைவழி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டுமே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத் தாக்குதல்கள் பலஸ்தீனியர்களின் கூடார முகாம்கள், உயரமான கட்டிடங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கியது. அதுமட்டுமின்றி சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.

காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல்களை வன்மையாகவும் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp