Search

Oct 5, 2025

உள்ளூர்

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது

குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது

நேற்றைய தினம் (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் இதனை அவதானித்து மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிசார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த காணியில் மண்டையோடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்படுகின்றது.

இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All