Jino
Sep 25, 2025
உள்ளூர்
போதைப்பொருள் தகவலுக்கு நேரடி அழைப்பு — பொலிஸார் அதிரடி !
நாடு முழுவதும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், நாடுமுழுவதும் காணப்படும் ஹெராயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி.-யின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம்.
இவ் தொலைபேசி எண்கள் மூலம் ரகசியம் பாதுகாக்கப்படும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மூலம், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொலிஸ் மற்றும் குடிமக்கள் இணைந்து செயல்படுவார்கள்.
மேல் மாகாணம் - சஞ்சீவ தர்மரத்ன கையடக்கத் தொலைபேசி 071-8591991
தென் மாகாணம் - தகித்சிறி ஜெயலத் 071-8591992
ஊவா மாகாணம் - மகேஷ் சேனநாயக்க 071-8592642.
சப்ரகமுவ மாகாணம் - மஹிந்த குணரத்ன 071-8592618
வடமேற்கு மாகாணம் - அஜித் ரோஹண 071-8592600
மத்திய மாகாணம் - லலித் பத்திநாயக்க 071-8591985
வடமத்திய மாகாணம் - புத்திக சிறிவர்தன 071-8592645
வடக்கு மாகாணம் - டி.சி.ஏ. தனபால 071-8592644
கிழக்கு மாகாணம் - வருண ஜெயசுந்தர 071-8592640
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All