Oct 24, 2025
உள்ளூர்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் - இலங்கை இராணுவத்தால் 76 வாகனங்கள் புனரமைப்பு.
இலங்கை இராணுவம் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் இணைத்துள்ளது .
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த மறுசீரமைப்புத் திட்டம், இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர்கள் படைப்பிரிவால் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது.
இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுசீரமைக்கப்பட்ட 76 வாகனங்கள் இன்று (24) முதல் உத்தியோகபூர்வமாக இராணுவத்தின் செயற்பாட்டுக் குழுவில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








