Search

Sep 18, 2025

உள்ளூர்

அதுல குமார ராஹுபத்தவுக்கு விளக்கமறியல்.

சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவால் நேற்று (17) கைதுசெய்யப்பட்ட நிலையில், ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.

அரசாங்கத்திற்கு 70 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தும் வகையில் நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2016 தொடக்கம் 2017 வரையான காலகட்டத்தில் அவரது அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All