Search

Rebecca

Nov 3, 2025

உள்ளூர்

மன்னாரிற்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்நிலையில் திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்தர் சிலை மற்றும் ஒரு களஞ்சியசாலையும் சேதமடைந்துள்ளன.

மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்காக ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் லேசான காயங்களுக்குள்ளான நிலையில், வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All