Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

எல்ல விபத்தில் ஊழியர் ஒருவர் பலி

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி 2 மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இவரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,

எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார்.

எனது கணவர் அன்பானவர், அவர் என் உணர்வுகளைப் புண்படுத்தும் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன்.

ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை. பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All