Oct 15, 2025
உள்ளூர்
35 வது "கறுப்பு ஒக்டோபர்" தின நினைவேந்தல்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு ஒக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
"கறுப்பு ஒக்டோபர்" என்பது 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயர சம்பவத்தைக் குறிக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 75,000 முஸ்லிம்கள் 24 மணி நேர அவகாசத்தில், சொத்துக்களை இழந்து, உடுத்திய உடைகளுடன் வெளியேற்றப்பட்டனர். இது முஸ்லிம்களால் 'கறுப்பு ஒக்டோபர்' என அழைக்கப்படுகிறது.
கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை(18) அன்று மாலை 4 மணிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள்,தமிழ் சிங்கள சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.அத்துடன் எக்ஸத் ஊடக வலையமைப்பு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் பிரதம விருந்தினராக யாழ் சிவில் மத்திய நிலைய தலைவர் அருண் சித்தார்த் கலந்து கொள்ளவுள்ளார்.
எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,
கௌரவ அதிதிகளாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான், நிந்தவூர் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச்சகருமான ஜௌபர், முன்னாள் இராணுவ மேஜர் ஜூனைட் நபீர், கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் யு.எல் அப்துல்லாஹ், தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் தலைவர் யு.எல்.எம் முபீன், யாழ் முஸ்லிம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான பி.எஸ்.எம் ஷாபுல் அனாமும்
விஷேட அதிதிகளாக ,காத்தான்குடி ஜம்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ அப்துல் கபூர் மதனி காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உப செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் ,அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் அனைத்து ஜூம்ஆப் பள்ளிவாயல் சம்மேளன முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜூனைதீன், சம்மாந்துறை அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யா தலைவர் ஐ.எம் இப்றாஹிம், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம் கலீல், காத்தான்குடி வர்த்தக சங்க தலைவர் கே.எல்.எம் பரீட் ,ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் எம்.ஐ.எம். நாஸர் , ஓட்டமாவடி முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி நியாஸ்தீன், கல்முனை வர்த்தக சங்க செயலாளர் ஹமீட் எஸ்.லெப்பை ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








