Search

Oct 23, 2025

உள்ளூர்

2026 சகல பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்.

2026 முதல் நாடு முழுதும் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு பாராளுமன்றத்தில் கூடியபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  • இது தொடர்பில் பிரதமர் தெரிவிக்கையில்,

ஆரம்ப பிள்ளைப்பருவ பாடத்திட்ட கட்டமைப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், சுமார் 19,000 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் படி கற்பித்தல் செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

கல்வி முறையின் தரமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All