Search

Rebecca

Sep 4, 2025

உள்ளூர்

சாதனை படைத்த மாணவன்

2025ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்ட நிலையில், ஆனந்தசோதி லக்சயன் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை அளவில் 194 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

குறித்த பரீட்சையானது கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 3,07,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர்.

இதில், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை அளவில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp