SEGU
Sep 15, 2025
பல்சுவை
வித்தியாசங்களின் விளைவிடமாக அரங்கம் காணும் ஹைக்கூ கவியமர்வு
சர்வதேச சமாதான தினமாகிய 21.09.2025 அன்று புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கின் நான்காவது அமர்வு நடைபெறவுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளரும் கவிதாயினியுமாகிய திருமதி மேரி ஸ்ரேலா இந்த அமர்வுக்கு தலைமை ஏற்கிறார்.
கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வித்தியாசமான அம்சங்களும் இடம் பெறவுள்ளன.
முற்றிலும் இளங்கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கி -வெகு விரைவில் திரையிடப் படவுள்ள "சனாதனனின் மெளனமொழி " என்ற முழுநீளத் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் முன்னோட்ட நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஹைக்கூ கவிபாட விரும்பும் ஆர்வலர்கள் உடன் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All