Search

Rebecca

Dec 24, 2025

உள்ளூர்

பண்டிகை காலத்திற்காக மேலதிக ரயில்கள் சேவையில்

கிறிஸ்துமஸ் பண்டிகை, பள்ளி விடுமுறை மற்றும் வருட இறுதியில் வரும் நீண்ட விடுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை சேவையில் சேர்க்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து மாத்தறைக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 29 ம் திகதியன்று , மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட்டு காலை 8.30 மணிக்கு கோட்டையை அடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோட்டை-காங்கேசந்துறை இன்டர்சிட்டி ரயில் (25) மற்றும் (28) ம் திகதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All