Search

Rebecca

Feb 2, 2026

உள்ளூர்

உலக சதுப்பு நில தினம் இன்றாகும்.

சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்படுகின்றது.

உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்குமிடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலமாகும். இவை சுற்றுச் சூழலின் இருப்பிற்கு பெரிதும் உதவுகின்றன. புலம்பெயர் பறவை இனங்கள் பலவற்றிற்கு சதுப்பு நிலங்கள் புகலிடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பூமியின் மொத்த பரப்பளவில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலத்திற்குரியது. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரு வகையான இதனை பிரிக்க முடியும். கடலோரம் உள்ள அலையாத்திக் காடுகள்இ குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை.

ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதேவேளை உலகம் முழுவதும் மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன.

சுற்றுலா தளங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன. பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது.

சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண் காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன.

உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும்இ நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.

அவ்வகையில் கொழும்பு நகரின் வரலாற்றை நோக்கும் போது சதுப்பு நிலங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகிறது. சதுப்பு நிலங்களைச் சூழ அபிவிருத்தியடைந்துள்ள இந்நகரானது இன்றும் அச்சதுப்பு நிலங்களைச் சார்ந்ததாகவே உள்ளது.

அதேநேரம் அச்சதுப்பு நிலங்கள் தரங் குறைந்த நிலையிலும் அழியும் தருவாயிலும் உள்ளன. பல்வேறு சட்ட திட்டங்கள்இ அரச நிறுவனங்களின் பங்களிப்பு இருந்த போதிலும் இன்று அதன் தரக்குறைவுக்கும் அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All