
Rebecca
Dec 26, 2025
உள்ளூர்
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 86 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களுடன் 3 இலங்கை பயணிகள் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உற்சவ காலத்தை இலக்காகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மற்றும் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பெண் வர்த்தகர்களும் உள்ளடங்குகின்றனர்.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளிலிருந்து , 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகள்,19 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அத்துடன் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியற்ற 430 “கொலாஜன்” பாக்கெட்டுகள், காலணிகள் மற்றும் ஏனைய வர்த்தகப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






