
admin
May 22, 2026
உள்ளூர்
வாகன இறக்குமதியை நிறுத்த எவ்வித தீர்மானமும் இல்லை: நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தெளிவு!

வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேபோன்று, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் எரிபொருள் விலையை மாற்றுவதற்கு தற்போது மேலதிக தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்றத்தின் எதிர்காலப் பணிகளைத் திட்டமிடுவதற்காகக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான கொறாடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், செஸ் (Cess) மற்றும் வரிகளை நீக்கும் தீர்மானத்தினால் கைத்தொழில்துறையினர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






