Search

Rebecca

Jan 26, 2026

உள்ளூர்

மதஸ்தலங்களை புனரமைக்கும் திட்டம் நாளை ஆரம்பம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைப்பதற்காக உறுதியான பிணைப்பை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.

மதஸ்தலங்களை புனரமைப்பு செய்து மீண்டும் மக்கள் தமது வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் புத்தசாசன, மத விவகார அமைச்சினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் காலை 10.00 மணிக்கு கம்பளை தொரகல பீகோன் ஹில் குடியிருப்பு பகுதியிலுள்ள ஸ்ரீ போதிருக்பராமா விகாரையில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All