Search

Jino

Sep 22, 2025

உள்ளூர்

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டம் 2025 சட்டமாகியது.

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலம் 2025.07.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2018 ஆம் ஆண்டின் கணக்காய்வு சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, அதிகரிக்கப்பட்ட தண்டனைகள், மோசடி தொடர்பான அதிகார விரிவுகள் மற்றும் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் கால வரையறைகள் மாற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மோசடி அல்லது ஊழல் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்வதற்கு கணக்காய்வாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் வருடாந்த விரிவுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் காலம் 5 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் பிரதான திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் புதிய சட்டம் 2025 ஆம் ஆண்டு 19ஆம் இலக்கமாக நடைமுறைக்கு வருகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp